யாழில் பொலிஸ் வண்டியில் குழந்தையை பிரசவித்த பெண்!!!

சுழிபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு பொலிஸ் வண்டியில் பிரசவம் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து பொலிஸாரின் சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

பிரசவ வலியினால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்னை வட்டுக்கோட்டை பொலிஸாரின்  ஜீப் வண்டியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது தாய் இடைநடுவில் பெண் குழந்தை பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுழிபுரம் பகுதியினை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸ் வாகனத்தில் பெண் குழந்தையினை பிரசவித்தவர் ஆவார்.

மேற்படி பெண்  நேற்று (03) காலை பிரசவ வலி காரணமாக முச்சக்கரவண்டியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அப்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி  பழுதடைந்து நின்றுள்ளது.

பிரசவ வலிகாரணமாக பெண் துடித்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் உதவியை நாடியுள்ளனர்.

உடனடியாக பொலிஸார்  தமது ஜீப் வண்டியில் ஏற்றி யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது ஜீப் வண்டி ஜந்து சந்தி பகுதியினை அண்மித்துக்கொண்டிருந்த போது குறித்த கர்ப்பிணி பெண்  ஜீப் வண்டியில் அழகான பெண் குழந்தையினை பிரசவித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் வாகன சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் குறித்த பெண்ணை அனுமதித்துள்ளனர்.

பொலிஸாரின் இம் முன்ணுதாரனமான செயற்பாட்டினை கண்ட அணைவரும் பாரட்டுக்களை தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் குடும்பமும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.