தாய்க்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில்... இப்படியும் ஒரு அதிசய நிகழ்வா..?

தாயும் மகளும் ஒரே நேரத்தில் ஆண்குழந்தைகளைப் பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று சிரியாவில் இடம்பெற்றுள்ளது.

சிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி என்பவரும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி என்பவருமே இவ்வாறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.<

மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளை இவர்கள் பெற்றெடுத்துள்ளனர்.

தாயும் மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஒரே மருத்துவ மனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளமை ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாகும்.

இவ்வாறான அபூர்வ நிகழ்வு உலகத்தில் நடந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என அம்மருத்துவமனை மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிரியாவைச் சேர்ந்த இவர்கள் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அன்பு காரணமாக தாய் தனது பிள்ளைக்கு "ரஜப்" என்றும் மகள் "தையிப்" என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.