சாவகச்சேரியில் மது ஒழிப்பு வாரத்தில் மதுபானங்களை விற்பனை செய்த ஒருவர் கைது

மது ஒழிப்பு வாரத்தில் 50 போத்தல் மதுபானங்களை விற்பனை செய்த ஒருவரை யாழ்ப்பாண பொலிஸாரும் மது ஒழிப்பு திணைக்களத்தினரும் இணைந்து கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை 4:30 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

மது ஒழிப்பு வாரத்தில் விற்பனை செய்த சந்தேக நபருக்கு எதிராக வழக்குபதிவு செய்த மதுவரி திணைக்களத்தினர் நாளை புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.