கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது காதலியின் வீட்டிற்கு சென்ற போது காதலியின் தந்தை மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பல்லேபெத்த பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்துள்ளார்.
காதலி இன்னமும் பாடசாலை செல்லும் மாணவி என்பதனால் இந்த தொடர்பிற்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல முறை மோதல் நிலைமையும் ஏற்பட்டு கொடகவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதியில் காதலி இந்த காதல் தொடர்பை நிராகரித்துள்ளார்.
அவ்வாறு இருக்கும் போது இந்த இளைஞன் கடந்த சனிக்கிழமை நீளமாக கத்தியுடன் காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். காதலியை சுவற்றில் தள்ளி கத்தியை கழுத்தில் வைத்து விருப்பத்தை வினவுவதற்கு ஆயத்தமாகியுள்ளார். அதன் போது அவர் குடிபோதையிலும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக செயற்பட்ட தந்தை மட்டை ஒன்றை கொண்டு வந்து இளைஞனை தாக்கியவுடன் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.