Google இன் போட்டியில் வென்றுள்ள ரொறொன்ரோ மாணவி!

ரொறொன்ரோ உயர்தர பாடசாலை ஒன்றின் மாணவி இன்றய நாளின் கூகுள் கனடா ராயல்டி கிரீடத்தை பெற்றுள்ளார்.

மடோனா இரண்டாம் நிலை கத்தோலிக்க பாடசாலை மாணவியான ஜனா பனெம் இளம் கலைஞர்களிற்கான் Google Doodle டிசைன் வடிவமைக்கும் போட்டியில்- தேடல் பொறி முன்பக்க பதாதை வடிவமைக்கும்-வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு பிரகாசமான எதிர்காலம் என்ற தலைப்பிலான வடிவமைப்பு புதன்கிழமை முகப்பில் இடம்பெறுகின்றது.

10.000டொலர்கள் பல்கலைக்கழக நன்கொடை மற்றும் இவரது பாடசாலை மற்றும் மடி கணனிக்காக 10.000டொலர்கள் மானியமாகவும் வழங்கப்படுகின்றது.

மற்றய மூன்று மாணவர்களும் பரிசில்களை பெற்றுள்ளனர்.