சற்று முன் கிளிநொச்சி தர்மபுரத்தில் மரத்தில் மோதி டிப்பர் விபத்து :

சற்று முன் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதி தர்மபுரம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (17.06.2017) காலை டிப்பர் வாகனம் சாரதியில் கட்டுப்பாட்டையிழந்து பாலை மரத்துடன் மோதுண்டதுடன் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் சுமன் தெரிவித்தார்.