கும்பகோணம் அருகே கல்லூரி மாணவி கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கும்பகோணம் அருகே கல்லூரி மாணவி கொலையில் 3 பேருக்கு தொடர்பு - விசாரணையில் தகவல் கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ஒரு லாட்ஜ்(தங்கும் விடுதி) உள்ளது.
இந்த லாட்ஜில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அவளிவநல்லூர் அண்ணாநகரை சேர்ந்த வீரையன் மகன் வி.சுபாஷ்சந்திரபோஸ் (வயது25) என்பவர் ஒரு பெண்ணுடன் வந்து அறை எடுத்து தங்கினார். நேற்று காலை இவர்கள் தங்கியிருந்த அறை கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
மேலும் நேற்று மாலை வரை அந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மாற்று சாவியை கொண்டு அறையை திறந்து பார்த்தனர். அப்போது அறையில் உள்ள படுக்கையில் சுபாஷ்சந்திரபோஸ் அழைத்து வந்த பெண், ‘‘சி.எப்.எல். பல்பால்’’ குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவிடை மருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பெண் உடலை பார்வையிட்டனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாள அட்டையையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் கும்கோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்த பாண்டியன் மகள் கீர்த்திகா(19)என்பதும்,
இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்திகாவை லாட்ஜுக்கு அழைத்து வந்த சுபாஷ்சந்திரபோசை தேடி வருகிறார்கள். காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கீர்த்திகா அவளிவநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது சுபாஷ் சந்திரபோசுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்ததும், இதுபற்றி கீர்த்திகா பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் சுபாஷ் சந்திரபோசிடம் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் காதலிக்கும்போதே சுபாஷ் சந்திரபோஸ் கொலை நடந்த லாட்ஜிக்கு கீர்த்திகாவை அழைத்து சென்றுள்ளார். ஆனால் இப்போது லாட்ஜில் தங்கியபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சுபாஷ்சந்திரபோஷ் கீர்த்திகாவை கொலை செய்துள்ளார். அங்கு தங்கியிருந்தபோது அவர் மேலும் 2 பேரை அந்த அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
எனவே அவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் சந்திரபோசுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. அவர் கீர்த்திகாவிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி ஏமாற்றி உள்ளார். தாராசுரத்தில் வீடு உள்ளது என்றும், அங்கு போலியாக 2 பேரை தாய்-தந்தையாக நடிக்க வைத்துள்ளார் என்ற தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.