தனதும் தனது காதலனதும் நிர்வாணப் புகைப்படங்ளை இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி 32 வயதான பெண்ணை தலாஹேன பிரதேசத்திலுள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நீர்கொழும்பு இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் நேற்று முன்தினம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 32 வயதான பெண் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இப் பெண் தனது கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்துப் பெற்றவர் என்றும் நபரொருவர் இப்பெண்ணுடன் பழகி திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
இப்பெண் அவசர பணத் தேவைக்காக தனது பெறுமதிமிக்க கைத்தொலைபேசியை இந்த சந்தேக நபரிடம் 2000 ரூபாவுக்கு ஈடுவைத்துள்ளார்.
சில நாட்களின் பின்னர் ஈடு வைத்த கைத்தொலைபேசியை மீட்கச் சென்றபோது சந்தேக நபர் கைத்தொலை பேசியின் சிம் அட்டையை பரிசோதித்ததாகவும் முறைப்பாட்டாளர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளவுள்ள காதலனுடன் அவர் நிர்வாணமாகவுள்ள காட்சிகள் அந்த சிம் அட்டையில் இருப்பதாகவும் அவற்றைத் பெற்றுக் கொண்டு இணையத்தளம் மூலம் மக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாக அப்பெண்ணை எச்சரித்துள்ளார்.
இணையத்தளத்தில் வெளியிடாதிருக்க தலாஹேன பிரதேசத்திலுள்ள விடுதியில் தம்முடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனத் தெரிவித்து அப்பெண்ணை பலாத்காரமாக விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.