பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : மக்களே அவதானம் !

நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வகை ஒன்று தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் வெளியாகியதையடுத்து இது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியானசம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

சோறு சமைத்து 24 மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கெட்டு போகாமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.அந்த அரிசியில் சமைத்த சோற்று உருண்டைகளை தரையில் அடித்த போதும் சிதறாமல் பந்து போன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பிலான காணொளி ஒன்றையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை மாகும்புரவில் அரிசிகொள்வனவு செய்த நபர் ஒருவரும் இந்த சம்பவத்திற்குமுகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள்என்பதாக வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன.

அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான ஒரு செய்தி பரப்பப்பட்டிருந்தது.

எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன, உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளன.

அத்துடன் இவ்வாறான செய்திகள்பரவத் தொடங்கியதன் பின்னர் மீண்டுமொரு முறை குறித்த அரிசியை பரிசோதனைக் கூடமொன்றில் சமைத்து பரிசோதனைக்குட்படுத்தியபோதிலும் எதுவித பிளாஸ்டிக் கலவைகளும் அடங்கியிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்களின் நன்மை கருதி குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியை பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன உறுதிப்படுத்தியுள்ளன.