கட்டாயமாக-வைத்திருக்க வேண்டும் எனப்படும் விளையாட்டு பொருளின் அபாயம்!

சிறுவர்களின் கவனத்தை திசை திருப்பி இந்த ஆண்டின் கட்டாயம்-வைத்திருக்க வேண்டும் என சிறுவர்களை தூண்டியிருக்கும் விளையாட்டு பொருளான fidget spinner குறித்து வெளியிடப்பட்ட அபாயம் காரணமாக ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் அல்லது ஏனையோர் பலரின் கனவு நிஜமானது என அறியப்படுகின்றது.

இப்புதிய பொருளினால் சிறுவர்களின் கவனம் திசைதிருப்ப படுவதாக கருதப்படுகின்றது.
ஜேர்மனியில் பிராங்பேட் விமான நிலைய சுங்க அதிகாரிகள் 35 மெட்ரிக் தொன் எடையுள்ள{ 39யு.எஸ்.தொன்கள்} சிறிய சுழலும் சிறு நுட்ப கருவிகளை மே மாதம் மட்டும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர். இவற்றை இல்லாதவாறு அழிக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வரும் இவற்றை பரிசோதித்த போது இவற்றில் இருந்து விழும் சிறிய துணுக்கள் சிறிய பிள்ளைகளிற்கு மூச்சு திணறலை ஏற்படுத்தலாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
தெளிவான வழிமுறைகள் மற்றும் இவற்றை தயாரிக்கும் நிறுவனம்  போன்ற தேவைப்படும் விபரங்கள் கூட காணப்படவில்லை எனவும் சுங்க பகுதி தெரிவிக்கின்றது.