யாழில் பெண்னை கொலை செய்து குழிதோண்டி புதைத்த இளைஞன்...

வயோதிபப் பெண்ணை கொலை செய்து நிலத் தில் குழிதோண்டிப் புதைத்த குடும்பத் தலைவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண நகர் மார்ட்டீன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் அதன் உரிமையாளர் லில்லி மேரி என்ற வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.அவரது வீட்டை வாடகைக்குப் பெற்று ஜெரோம் என்பவர் அவருடைய மனைவியுடன் குடியிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளருடன் ஜெரோம் அடிக்கடி முரண்பாட்டில் ஈடுபட்டு வந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.கொலைக் குற்றச்சாட்டில் ஜெரோம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.வயோதிப பெண் படுகொலை வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தன. இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று தீர்ப்புக்காக அழைக்கப்பட்டது.“2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள 18 ஆம் இலக்க வீட்டில் அதன் உரிமையாளரான லில்லிமேரி, ஜெரோம், ஜெரோமின் மனைவி ஆகியோர் வசித்து வந்தனர்.அதே வருடம் டிசெம்பர் மாதம் லில்லிமேரி காணாமற்போய்விட்டார் என்று எதிரியான ஜெரோம், லில்லிமேரியின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். அது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.2 மாதங்கள் கழித்து ஜெரோமுக்கும் அவரது மனைவிக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெரோமின் மனைவி ஜெரோமை விட்டு பிரிந்து தனி வீட்டில் வசித்து வந்தார். இறந்த லில்லிமேரியின் உறவினரின் வீட்டுக்கு அருகில் ஜெரோமின் மனைவி வசித்து வந்தார்.காணாமற்போனதாகக் கூறப்பட்ட லில்லிமேரியை தனது கணவனே கொலை செய்து அதே வீட்டில் புதைத்தார் என்று ஜெரோமின் மனைவி லில்லிமேரியின் உறவினர்களுக்குக் கூறியுள்ளார்.தகவல் பொலிஸ் நிலையம் சென்றது. நீதிவானின் கட்டளைக்கு இணங்க சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெரோம் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் வழக்கு விசாரணை ஆரம்பித்தது.ஜெரோமின் மனைவி கொழும்பில் காஸ் சிலிண்டர் வெடித்து இறந்தமையால் முக்கிய சாட்சி இல்லாது வழக்கு விசாரணை இடம்பெற்றது. லில்லிமேரியின் கழுத்தை நெரித்தும், தலையில் மோட்டையான ஆயுதத்தால் தாக்கியும் அவரை எதிரி கொலை செய்தார் என்று சாட்சியத்தில் கூறப்பட்டது.கொலை செய்யப்பட்ட லில்லிமேரி அணிந்திருந்தநகைகளும் ஜெரோமின் முலமாக நகைக் கடையில் விற்றப்பட்டமையும், நகைக் கடை உரிமையாளரின் சாட்சியத்தின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது.நியமான சந்தேகங்களுக்கு அப்பால் எதிரியான ஜெரோம் குற்றவாளியாக இனங்காணப்படுகிறார். அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.