5 பீர் கிளாஸ். 50 முட்டை. உங்களால் முடியுமா...?

சீனாவில் இளைஞர் ஒருவர் வைரலாக வேண்டும் என்பதற்காக ஐம்பது பச்சை முட்டைகளை இருபது நிமிடத்திற்குள் முகம் சுளிக்காமல் குடித்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஆறு கோடி பேர் பார்த்துள்ளனர்.இணையத்தில் தற்போது சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது. குறித்த வீடியோவில் வரும் இளைஞர் ஐந்து பீர் கிளாஸ்களில் முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார்.ஒவ்வொரு கிளாசிற்கும் 10-வீதம் 50-முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார். அதன் பின் அந்த கிளாஸ்களை அவர் அப்படியே அடுத்தடுத்து எடுத்து குடிக்கிறார்.இதை அவர் 20-நிமிடத்திற்குள் செய்து முடித்துவிட்டார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பச்சையாக ஒரு முட்டையை குடிப்பதே கடினம். அதன் பச்சை வாசனை வயிற்றை குமட்டிக் கொண்டு வரும்.5 பீர் கிளாஸ்களில் இருந்த 50 முட்டையையும் அடுத்தடுத்து குடித்தவர் இறுதியாக வெற்றி குறியும் காட்டுகிறார். சுவாசிப்பதற்கு கூட நேரம் கொடுக்காமல் ஒவ்வொரு கிளாஸ் முட்டையை முழுங்கியுள்ளார்.தற்போது இந்த வீடியோவை 6-கோடிபேர் பார்த்துள்ளனர், அந்த நபர் இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இதை செய்ததாகவும், அதன் படி தற்போது பிரபலமாகிவிட்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.