இலங்கையில் மிரிஹானை தடுப்புமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளில் 22 வயது இளம் யுவதி ஒருவர் இலங்கை பொலிஸ் ஊழியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக எமது ஊடக பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.சுகயீனம் காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த யுவதியை முகாமுக்கு அழைத்து செல்வதாக கூறி நேற்று மாலை அழைத்துசென்றுள்ள பொலிஸ் ஊழியர் ஒருவர் பிற இடமொன்றுக்கு அழைத்து சென்றுஅவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளக்கியுள்ளதாக குறித்த பெண் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட போது சாட்சியம் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.
முகாமுக்கு வர வேண்டிய பெண்ணைக் காணவில்லையென என தேடிக்கொண்டிருந்த நிலையில் பின்னர் அவர் முகாம் பகுதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தில் முஸ்லிம் சட்டத்தரணிகள் குழு நேரடியாககளமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள அதேவேளை இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகளை பொலிஸ் குழு ஒன்று முன்னெடுத்துள்ளது.