நெக்லஸில் தொடங்கி கொலையில் முடிந்தது. நாசமாகி போன வாழ்க்கை.

மதுரை மாட்டுத்தாவனியைச் சேர்ந்தவர் முருகன். இவர் அப்பகுதியிலேயே ஜிகர்தண்டா கடை ஒன்றை நடத்தி வந்தார். காலை கடைக்கு போனால் இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புவார்.

நன்றாக உழைத்து நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தார் முருகன். இந்நிலையில், இவரது பெற்றோர் முருகனுக்கு திருமண ஏற்பாடு செய்தனர்.மதுரை அருகேயுள்ள மேலூரைச் சேர்ந்த யாழினி என்ற பெண்ணை முருகனுக்கு பேசி முடித்தனர்.நல்லபடியாக திருமணமும் முடிந்தது. மனைவி யாழினி மீது உயிரையே வைத்திருந்தான் முருகன்.

யாழினியும் நல்ல பெண்ணாகத்தான் இருந்தாள். நாட்கள் நகர்ந்தன, நன்றாக சென்று கொண்டிருந்தது இவர்களது திருமண வாழ்க்கை.தினமும் கிடைக்கும் ஆயிரங்களை அப்படியே மனைவியிடம் கொடுக்க அவள் வங்கியில் போட்டுவிடுவாள். யாழினிக்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள மிகவும்பிடிக்கும்.

விதவிதமான புடவைகள், நகைகள் வாங்கிக் கொள்வாள். வாரம் ஒருமுறை அழகுநிலையம் சென்று விடுவாள். பழங்கள் நிறைய சாப்பிடுவாள்.அதனால் உடம்பில் ஒரு மினுமினுப்பு இருந்தது. நல்ல கலர்வேறு..! ரோட்டில் நடந்து போகும் ஆண்களும் யாழினியை திரும்பிப்பார்க்காமல் செல்ல முடியாது.

அதில் யாழினிக்கு நிறைய சந்தோஷம்.இந்நிலையில், முருகன் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இரவு கடையிலிருந்து வந்த உடனேயே அடித்துப் போட்ட மாதிரி தூங்கிப் போவான்.இதனால், அழகு இருந்து என்ன பயன் அடுத்தவர்கள் தன்னை ரசித்து ஏங்கும் பொழுது கணவன் முருகன் சில தினங்களாக தன்னை சீண்டுவதில்லையே என்கிற ஏக்கம் அவளுக்கு நிறையவே இருந்தது.

இந்நிலையில், உள்ளூர் அரசியல் பெரும்புள்ளியின் தம்பி ஒருவர் யாழினியை ஒரு முறை பார்த்து விட்டு சொக்கிப் போனார்…!இப்படி ஒரு அழகியா..யாருடா இது..? என்று கேட்க, அல்லக் கைகள் மொத்த ஜாதகத்தையும் இரண்டே நாளில் கொடுத்துவிட்டனர்.

அழகுநிலையப் பெண் ஒருவரை மடக்கி அவர் மூலம் யாழினியை மயக்கி ஒரே வாரத்தில் அரசியல்வாதியின் தம்பியின் பண்ணை வீட்டிற்கு கொண்டு போய்விட்டானர் அந்த அல்ல கைகள்.பண்ணை வீட்டிற்கு சென்றவளுக்கு, அரசியல்வாதியின் தம்பி எடுத்த எடுப்பில் வைர நெக்லஸ் எடுத்து கழுத்தில் மாட்ட ஆடிப்போனாள் யாழினி. இவளை நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடிவு செய்து விலை உயர்ந்த செல்போன், நகைகள் பட்டுப் புடவைகள் என்று வாங்கிக் கொடுத்து அசத்தினார்.

இது எதுவும் அந்த அப்பாவி கணவனுக்கு தெரியாது.திடீரென்று ஒருநாள் யாழினியைஊட்டிக்கு அழைத்தார் அரசியல்வாரிசு. பொய் சொல்லிவிட்டு கூடவே போனாள்.ஒருவாரம் உல்லாசத்தில் திகைத்தார்கள். அங்கு தான் கணவனை முடித்துவிட திட்டம் தீட்டினார் அரசியல்வாதியின் தம்பி.

முருகன் தூங்கும் போது ஒரு கொசுவர்த்தி சுருளைக் கொண்ட அரசியல்வாதியின் தம்பி கூறியதை நிறைவேற்றினாள் யாழினி. இரவு படுக்கையிலேயே கருகிப் போனான் அந்த அப்பாவி கணவன். யாழினி மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் அரசியல் செல்வாக்கில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

யாரும் எதிர் பாராத வகையில் ஒருநாள் அந்த அரசியல் வாரிசு கொலை செய்யப் பட்டார். வாரிசு இறந்து போனதும், போலீஸ் மீண்டும் முருகன் மரணத்தை தூசி தட்ட வகையாக மாட்டினாள் யாழினி.ஆனாலும் ஏனோ தெரியவில்லை..! வெளியே வந்து விட்டாள். வெளியேவந்து என்ன பயன் அவளை கொலைகாரி என்று சொல்லி உறவுகள் ஒதுக்கி விட்டது. தற்போது தனிமரமாக யாருடைய ஆதரவும் கிட்டாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறாள் பேரழகி யாழினி.

ஒரு விஷயத்தை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கணவன் கொலை செய்யப்பட்டதும் போலீசின் முதல் சந்தேகம் மனைவி மீது தான் எழும். காரணம், சமீப காலத்தில் பெருகிவிட்ட கள்ளக் காதல் கொலைகள்..அதில் மாட்டிக் கொண்டு சிக்கும் பெண்கள், மற்றும் கள்ளக்காதலன்..

என்னதான் பார்த்து பார்த்து திட்டங்கள் போட்டு நாடகமாடினாலும் போலீஸ் நோண்டி எடுத்து விடும் என்பதே யதார்த்தம்.கொலை செய்து விட்டபின் கணவன் இறந்து போகிறான். மனைவி மாட்டிக் கொள்கிறாள். கள்ளக்காதலன் மாட்டுகிறான் என்பது நேரடியான பாதிப்புகள்..!

ஆனால், வெளியே தெரியாத பாதிப்புகள் என்பது குழந்தைகள் தெருவிற்கு வருகிறது.. உறவுகள் வெட்கி தலைகுனிகிறது. அவமானப்பட்டு பெற்றவர்கள் நொறுங்கிப் போகிறார்கள்…!செக்ஸ் என்பது சில நிமிட சந்தோசங்கள்.. ஆனால் குற்றம் என்பது ஆயுள் முழுக்க தண்டனைகள் எல்லோருக்கும்…!

செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை கொஞ்சம் புரிந்துகொண்டால், இங்கே அனைவரின் வாழ்க்கையும் சொர்க்கமே