10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை அன்றே தலையணையால் அமத்தி கொலை செய்தாள் கொடூர தாய். இச்சம்பவமானது கடந்த 9 ம் திகதி யாழ் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தீவுப்பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் 2 பிள்ளைகளின் தாயாவார்.இவரது கணவர்தொழில் நிமிர்த்தம் காரணமாக அரபு நாடு ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இதனால் கடந்த 2 வருடங்களாக அவர் மனைவி பிள்ளைகளை பார்க்க இலங்கை வரவில்லை. இதனை காரணமாக வைத்து மேற்படி தாய் தனது உடல் தேவைகளை வேறு நபர் முலம் தீர்த்துவந்துள்ளார். இதனால் அழகான பெண்குழந்தை ஒன்றும் பழிபாவசெயலிற்காக அவள் வயிற்றில் வளர்ந்துள்ளது. இதை உணராத கொலைகாரி காலம் கடந்தபின் நிலைமையை உணர்ந்து தனியார் வைத்தியசாலை ஒன்றை நாடியுள்ளார். அங்கு அவரது நடகத்தை உணர்ந்த வைத்தியர் தன் ஆதங்கம் தீர பேசிதீர்த்த பின்குழந்தையை சத்திரசிகிச்சை மூலம் பெற்று சிறுவர் காப்பகத்திற்கு வளங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சைக்கான திகதி கடந்த 9 ம் திகதி காலை 9 மணியாகும். இவரின் தொடர்புகளையும் வைத்தியர்களின் பேச்சுக்களையும் வைத்து அங்கு கடமை புரியும் ஊழியர்களிற்கு உன்மை புரிந்துள்ளது. இதனால் அவரை எல்லா ஊழியர்களும் வெறுப்போடு பார்ப்பதாக அவள் உணர்ந்துள்ளாள். அப்போதே அவள் மனதிற்குள் கொடூர சிந்தனை துளிர்விட தொடங்கியுள்ளதை யாரும் அறியவில்லை. சத்திரசிகிச்சையும் ஆரம்பமானது. பேச்சுக்களும் தொடர்ந்து கொண்டிருந்தது. சுமார் 9.20 மணியளவில் அழகான பெண்குழந்தை ஒன்று புதிய உலகில் உதயமானது. குழந்தையின் அழகை கண்டு வியந்த அனைவரும் அடுத்து நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்திருக்கவில்லை. சத்திரசிகிச்சை வெற்றி... குழந்தைக்கும் எதுவித பிரச்சைனையும் இல்லை.. எல்லா ஊழியர்களினதும் வாயில் முணுமுணுத்த விடயம் அன்றுவரை அடங்கவில்லை. விடுதிக்கு அனுப்பப்பட்ட தாயும் பிள்ளையும் நலமாகவே இருக்கின்றனர்.என்பதை வைத்தியர்களும் தாதியர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். இந்நிலையில்தான் அந்த கொலைகாரி மனதில் இருந்த கொடூரசிந்தனை அரங்கேறியுள்ளது. அருகில் யாருமற்ற போது தலையணையால் குழந்தையின் முகத்தை மூடி மகா பதகச்செயலை அரங்கேற்றியுள்ளார் அந்த கொலைகாரி. பின்னர் எதுவும் அறியாதவர் போல பாசாங்கு பண்ணி தூங்குவது போல கிடந்துள்ளார்.குழந்தையின் சத்தம் கேட்கவில்லையே என்பதை சிறிது நேரத்தில் உணர்ந்த தாதி ஒருவர் தாயை எழுப்பியுள்ளார். தூங்குபவரை எழுப்பலாம்... தூங்குவதுபோல நடிப்பவரை எழுப்பலாமா... பின்னர் உடனடியாக தாதி வைத்தியர் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்றுள்ளார். உயிரை காப்பாற்றும் புனித துறையில் இருப்பவர்கள் பதறியடித்து அவசர முதலுதவிகளை செய்துள்ளனர். அனைத்து வைத்தியர்களும் முயன்றும் மண்விட்டு போன உயிரை மீள கொண்டுவர முடியவில்லை. இதை புரிந்துகொண்ட கொலைகாரி பாசாங்கு அழுகையுடன் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார். தனது கள்ளத்தனம் கணவரிற்கு தெரிந்தால் தன்னை விவாகரத்து செய்துவிடுவார் என சதா இவர் புலம்பியபடியே இருந்துள்ளார். அதற்காக எதுவுமறியா பிஞ்சுக்குழந்தையை துடிக்க துடிக்க கொலை செய்ததை யாரும் மன்னிக்க முடியாது. எத்தனையோ தாய்மார்கள் குழந்தைச் செல்வத்திற்காக அன்றாடம் ஏங்கித்தவித்து கோவில் குளம் சுற்றி எவ்வளவோ பணத்தையெல்லாம் செலவழித்து தவம்கிடக்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் கையில் கொடுத்திருந்தாலும் கணவனிற்கு நீசெய்த துரோகம் கொஞ்சமாவது குறைந்திருக்கும். குடும்ப கஸ்டத்தை தலையில் சுமந்து உங்களை நெஞ்சில் சுமந்து அன்றாடம் அன்னிய நாட்டில் அடிமைப்பட்டு போராடும் கணவனிற்கு நீ காட்டும் நன்றிக்கடன் இதுதானா..??இப்படியொரு பாதகச்செயலை செய்ய எப்படித்தான் மனது வந்ததோ உனக்கு.....உன்னுடைய மகா பதகச்செயலிற்கு நடுவீதியில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்தாலும் அடங்காது பலர் வேதனை. இவரை நம்பி இன்னும் இரண்டு குழந்தைகள் இருப்பதாலும் இந்த விடயம் வெளியில் தெரிந்தால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதனாலும் அவரின் புகைப்படங்களையும் பெயர்விபரங்களையும் நாம் இங்கு பிரசுரிக்கவில்லை.இப்படிப்பட்ட தாய் மீண்டும் இதுபோல கருவை சுமந்து வராமல் இருக்கவும் அவரின் காமப்பசிக்கு இலகுவாக இருக்கட்டும் எனும் நல்லெண்ணத்தில் தற்காலிக குடும்பக்கட்டுப்பாடு செய்து அனுப்பபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.