சாமியார் பலாத்காரம் பண்ணும் போது பொண்ணு கொடுத்த தண்டனை.

24வயதுடைய தென் இந்திய பெண் ஒருவரை இந்து சாமியார் ஒருவர் கற்பழிக்க முயன்றதால் அப்பெண் அவரின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் கேரளா பகுதியில் இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணை குறிப்பிட்ட நபர் கடந்த எட்டு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மாணவியான இப்பெண் திருவனந்தபுரத்தில் வசிப்பவர். சந்தேக நபர் குடும்ப சமய குருவாக அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். இப்பெண் 16-வயதாக இருக்கும் போதே இந்நபர் இவளை பலாத்காரம் செய்ய தொடங்கியதாக இப்பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளாள். சுவாமி என்ற காரணத்தால் வீட்டிற்கு அடிக்கடி வரும் இம்மனிதன் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இவளை துன்புறுத்தியுள்ளான்.வெள்ளிக்கிழமை இரவு சம்பவம் நடந்த பின்னர் இப்பெண் வீட்டை விட்டு வெளியேறி பொலிசாரை அழைத்துள்ளாள்.குற்றம் சாட்டப்பட்ட நபர் 54-வயதுடைய கணேசானந்தா தீர்த்தபட என்பவர் தான் ஒரு ஆன்மீக மருத்துவர் என தன்னை அறிமுகப்படுத்தியவர்.சம்பவம் நடந்த பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு புனரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இத்தகைய ஒரு நடவடிக்கை எடுத்த இப்பெண் ஒரு புத்திசாலி என கேரள மாநில முதல் அமைச்சர் பின்ராயி விஜயன் தெரிவித்தார். பெண் ஒருவரின் தைரியமான மற்றும் வலுவான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.படுக்கையில் இருந்த இப்பெண்ணின் தந்தையை குணப்படுத்த இவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்த இந்நபர் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன்னை பலவந்தமாக கற்பழித்ததாக இப்பெண் பொலிசாரிடம் தெரிவித்தாள்.வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த மனிதன்  பலவந்தமாக அவள் மீது முயன்ற சமயம் இப்பெண் கையில் கத்தி ஒன்றை வைத்து தாக்கியுள்ளாள்.