சாக்லேட் கெடுத்து பல பெண்களை அனுபவித்த அண்ணன் தம்பி.

கடையில் வேலைசெய்துகொண்டு இளம்பெண்களை மயக்கி, அவர்களை அனுபவித்து வந்த அண்ணா மற்றும் தம்பிக்கு 22 வருட சிறை தண்டனை வழங்கி பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. லிவர் பூலில் உள்ள கடை ஒன்றில் இளவசரன்(26) வினோதன்(27) இரு சகோதரர்கள் வேலை செய்து வந்துள்ளார்கள். கடைக்கு வரும் வயது குறைந்த பெண்களுக்கு இவர்கள் இலவசமாகசாக்கிலேட் கொடுப்பது.

அவர்களது மோபைல் போனுக்கு இலவச டாப் அப் செய்வது. மேலும்அவர்களுக்கு இரவில் விஸ்கி மற்றும் பிரரைக் கொடுத்து போதை ஏற்றுவது.இவ்வாறு போதை ஏற்றி அவர்களை அனுபவித்து வந்துள்ளார்கள்.
இது போல கடந்த 5 வருடங்களாக இவர்கள் பல சிறுமிகளின் வாழ்க்கையில் விளையாடி வந்துள்ளார்கள். இருப்பினும்இவர்களில் சுமார் 30 பேர் மட்டுமே பொலிசார் விசாரித்த வேளை தமக்கு நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர்கொடுத்த முறைப்பாட்டை அடுத்து. இவர்களை பின் தொடர்ந்த பொலிசார் பல மாதங்களாக ரகசிய விசாரணையில்ஈடுபட்டுக்கொண்டு இருந்த அதேவேளை. இவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வந்துள்ளார்கள்.

இதன் அடிப்படையில் கையும் களவுமாக இவர்கள் மாட்டிய வேளை பொலிசார் இவர்கள் இருவரையும் கைது செய்து. சுமார் 30 பெண்களின் வாக்குமூலத்தையும் நீதிமன்றில் சமர்பித்துள்ளார்கள். இதில் இளவரசனுக்கு 22 ஆண்டு சிறையும். வினோதனுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இவ்விருவரும் தமிழர்கள் என்பது வெட்க்கக் கேடான விடையம்.