யாழில் செத்த வீட்டிற்கு வாழைக்குலை ஏற்றச்சென்ற இளைஞன் பரிதாப பலி

வாழை­யைக் குலை­யு­டன் ஏற்­றிச் சென்ற ஹன்ரர் வாக­னத்­தி­லி­ருந்து விழுந்த இளை­ஞன் சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்­தான் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் நாவாந்­து­றையை அண்­மித்து இடம்­பெற்­றது. சம்­ப­வத்­தில் கிளி­நொச்சி வன்­னே­ரிக்­கு­ளத்­தைச் சேர்ந்த ஜெக­சோதி இரு­த­ய­ராஜ் (வயது – 17) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.
குறித்த சிறு­வன் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள உற­வி­னர் வீட்­டுக்­குச் சில நாள்­க­ளாக வந்து தங்­கி­யி­ருந்­துள்­ளார். அவ­ரது உற­வி­னர் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். அதற்­கா­கக் கடந்த 30 ஆம் திகதி குலை­யு­டன் கூடிய வாழை­ம­ரத்தை ஏற்­றி­ய­வாறு கூலர் வாக­னத்­தில் நண்­பர்­க­ளு­டன் சென்­றுள்­ளார்.
வாக­னப் பின்­க­தவு திறந்­தி­ருக்க அதில் சாய்ந்­தி­ருந்­த­வாறு பாடல் பாடிக்­கொண்­டி­ருந்­த­வர் வாக­னம் வீதி­யில் பள்­ளத்­தில் இறங்கி ஏறி­ய­போது தூக்கி வீசப்­பட்­டார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
வீதி­யில் மயங்­கிய நிலை­யில் காணப்­பட்ட அவ­ரைச் சக நண்­பர்­கள் மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்த்­த­னர். எனி­னும் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்­று­முன்­தி­னம் மாலை அவர் உயி­ரி­ழந்­தார் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது. திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மற்­றும் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.