யாழில் வாள் வெட்டுக்கு இலக்கானவரை வைத்தியசாலைக்குள் துரத்திய ரவுடிகள்

இரவு வாள்­வெட்­டுக்கு இலக்­கா­ன­வர் வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்­ற­போது வாள்­வெட்­டுக்­கா­ரர்­கள் மீண்டும் துரத்­திச் சென்­றுள்­ள­னர். வைத்­தி­ய­சாலை வாயி­லில் பொலி­ஸார் நின்­ற­ தால் அவர்­கள் திரும்­பிச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்டது.

இந்­தச் சம்­ப­வம் கச்­சா­ய் தெற்­கில் நேற்­றி­ரவு 10.30 அள­வில் இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த புவ­னேஸ்­வ­ரன் றஜீ­வன் (வயது – 28) என்­ப­வரே கையில் படு­கா­ய­ம­டைந்­தார்.
அவ­ரது வீட்­டுக்கு அண்­மை­யில் வைத்து வாளால்   வெட்­டி­ விட்­டுத் தப்­பிச்­சென்ற‌ வாள் வெட்­டுக் காரர்­கள் காய­ம­டைந்­த­வர் சிகிச்­சைக்­கா­கச் சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது  அவரை மீண்­டும் துரத்­திச் சென்­ற­னர்.
ஆயி­னும் அவர் வேக­மாக வைத்­தி­ய­சா­லையை நெருங்­கி­னார். வைத்­தி­ய­சாலை வாயி­லில் நேற்­றுப் பொலி­சார் நின்­றி­ருந்­த­னர். இத­னால் வாள்­வெட்­டுக்­கா­ரர் திரும்­பிச் சென்­ற­னர் என்று பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரால் கூறப்­பட்­டது.