அச்சுவேலி வடக்கு மடித்தடி பகுதியில் கர்பினி பெண் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில், வயிற்றில் அடிகாயங்களுக்கு உள்ளான பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் அதே பகுதியினை சேர்ந்த கபில்ராஜ் தர்சிகா வயது(26) என்ற பெண்னே காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காணி ஒன்றில் திருட்டு தனமாக தேங்காய் பறிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணுக்கும் அதே பகுதியினை சேர்ந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில், அதே பகுதியினை சேர்ந்த நபர் ஒருவர் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர். தாக்குதலினை மேற்கொண்ட சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.