டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது.
இந் நிலையில் அச்சம்பவத்தை மிஞ்சும் அளவில் ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
கடந்த 9-ஆம் திகதி 23 வயதான இளம்பெண் ஒருவர் வேலைக்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்ற அந்த இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை சிதைத்து கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்து வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அதில் இருவர் பெண்ணின் முன்னாள் காதலர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. காதல் முறிந்து விட்ட நிலையில் அவரை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

