கொடிகாமம் மந்துவில் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பபவம் நேற்று மாலை 4:30 மணியளவில் பத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த 20 இளைஞர்கள் மந்துவில் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை வெட்டியுள்ளனர்.இச் சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த மகேந்திரம் திஷாந்தன் வயது 20 என்ற இளைஞர்படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம்பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் ஆதரவுகளை வழங்க இத் தகவலை பகிர்ந்கொள்ளுங்கள்.
