இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி2 படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு சாதனையை படைத்துள்ளது. 1000 கோடி வசூல் ஈட்டியுள்ளதால் ராஜமௌலி மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க, இந்த படத்தில் நடித்த தமன்னா இயக்குனர் ராஜமௌலி மீது செம கடுப்பில் உள்ளாராம். 2ம் பாகத்திற்காக அவர் நடித்த பல சீன்களை வெட்டியது தான் அதற்கு காரணம்.மொத்த படத்திலும் மூன்று முறை மட்டுமே வரும் தமன்னாவுக்கு வசனம் எதுவுமே இல்லை. பாகுபலி முதல் பாகத்தில் கலக்கிய அவரை இரண்டாம் பாகத்தில் முழுமையாக ஒதுக்கியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வழக்கமாக எப்போதும் ட்விட்டரில் அக்ட்டிவாக இருப்பவர் தமன்னா, ஆனால் பாகுபலி படம் வெளியான அன்றிலிருந்து அவர் ட்விட்டர் பக்கமே வரவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.