தேசிய மட்ட கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவிகள் மேலும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் தியகம மகிந்த ராஐபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்ற 18 வயது பெண்கள் பிரிவில் ச.சங்கவி கோலூன்றி பாய்தல் போட்டியில் 2.8 M பாய்ந்து இரண்டாமிடத்தையும்,எஸ் தரணிகா 2.7M பாய்ந்து மூன்றாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப் போட்டியில் சங்கவி ஈட்டி எறிதலில் முதலாமிடத்தினையும்,தட்டு எறிதலில் மூன்றாமிடத்தினையும் பெற்று மொத்தமாக தேசிய மட்ட போட்டியில் மூன்று பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த அதிபர் ந.சர்வேஸ்வரன் மற்றும் பொறுப்பாசிரியர் திரு. ப.மதனரூபன் மற்றும் பயிற்றுவிப்பாளர் கோ.கணாதீபன், அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.