நல்லுார் முத்திரைச் சந்தியில் தாக்குதல்!! அதிரடிப்படை குவிப்பு!!

சற்று முன் நல்லுார் முத்திரைச் சந்திப் பகுதியில் வாகனம் ஒன்று இனந்தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வியாபார நிமிர்த்தம் சேவையில் ஈடுபடும் வாகனமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
4 மோட்டார் சைக்கிள்களில் வாகனத்தை துரத்தி வந்த சுமார் 8 மேற்பட்டவர்கள் குறித்த வாகனத்தை சுற்றி வளைத்து தாக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியி்ல் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.