பள்ளியில் மாணவர்கள் கையில் கற்பூரம் கொளுத்திய ஆசிரியர்

ஹட்டன் - பொகவந்தலாவைக்கு உட்பட்ட பாடசாலையில் மாணவி ஒருவரின் பணத்தை திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர் மாணவர்கள் கையில் கற்பூரத்தை கொளுத்தியச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது கையில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலையில் தரம் 3 இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே இவ்விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.