வேலையற்ற பட்டதாரிகளின் அந்தரங்கம் வெளியாகியதால் மக்கள் பரபரப்பு !!

வேலையற்ற பட்டதாரி மாணவர்களின்((யாழ் மாணவர்கள் இல்லை)) ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் நெல் அறுவடை செய்யும் விவசாயியாகவும் வலையுடன் மீனவராகவும் கச்சான் பைக்கற்றுடன் கச்சான் வியாபாரிகளாகவும் வேடமிட்டு ஆரப்பாடம் நடத்தியமையானது
 இத்தொழிலும் இத்தொழில்களை செய்வோரும் கீழ்த்தனமானது இழிவானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட இத்தொழில்களை செய்தாலே கீழ்த்தனமானது இழிவானது என எண்ணும் போது இவர்கள் ஒரு அரசாங்க வேலை கிடைத்த பின்னர் அதே தொழில் செய்வோரும் சாதாரண குடிமகனும் சேவைநோக்குடன் செல்லும் போது எப்படி அவர்களை மதிப்பார்கள்??? எப்படிஅவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள்???

அந்த மனிதர்கள் ஒவ்வொரு நாளும் உடலை வருத்தி வேலைசெய்யவதும் அவர்களின் மனவேதனையும் யாருக்கும் தெரியுமா???

நீங்கள் பெறும் இலவச கல்வியில் ஒவ்வொரு விவசாயியும் தனது உற்ப்பத்திப் பொருளை சந்தைப்படுத்தும் போது செலுத்திய 5-10 வீத வரியும் ஒவ்வொரு மீனவனும் சந்துப்படுத்தும் போது செலுத்திய5-10 வீது வரியும் அடங்கியுள்ளது என்பது தெரியுமா???.

ஏன் நீங்கள் அரசாங்க வேலை கிடைத்த பின் பெறும் ஊழியத்தில் கூட அவர்களின் வரி/உழைப்பு இருக்கும் அதையும் மறந்து விடாதீர்கள்.

பல பட்டதாரிகளை உருவாக்கியவர்கள் விவசாயம் மீன்பிடி கச்சான் விற்றல் போன்ற வாழ்வாதாரங்களை கொண்ட குடும்பங்களே. எல்லாப்பட்டதாரிகளும் மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் அல்ல.

நவீன புதுயுகத்தில் படித்த பட்டதாரிகளே மேற்குறிப்பிட்ட தொழில்களை கீழ்த்தனமாக எண்ணும் போது இவர்களுக்கும் பின்தங்கிய சமூகத்தை தொழில்களை மையமாக வைத்து காலால் மிதிக்கும் சாதிவெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்??????