அஜித்துடன் மோதலுக்கு ரெடியாகும் சிவகார்த்திகேயன்...

அஜித் இன்றைக்கு பெரும் புகழோடு இருக்கிறார் என்றால் என்ன காரணம் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். வெற்றி, தோல்வி என நினைக்காமல் செய்யும் வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்பதே அவரின் எண்ணம்.

இவரது நடிப்பில் வரும் விவேகம் இப்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. படத்தை ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடலாம் என முடிவுசெய்யபட்டு பின் அது மாறியது. ரம்ஜான் என்றார்கள் அதுவும் தள்ளிப்போனது.

இப்போது ஆகஸ்ட் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். ஆனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் வெளியாக இருக்கிறது.

இதனால் வேலைக்காரன் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வேலைக்காரன் திட்டமிட்ட படி அதே நாளில் வெளியிட வேண்டும் என உறுதியாக இருக்கிறார்களாம்.

இப்போதே சினிமாக்களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. மேலும் சிவா அஜித் நடித்த ஏகன் படம் மூலம் சினிமாவிற்கு வந்ததால் இதுவும் அவருக்கு ஒரு சாதனை தான்.