தமிழ் மொழியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

இந்தியா உள்ளுர் அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் டி20 தொடர் இந்த ஆண்டு தமிழ் வர்ணனையுடன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

10வது ஐபிஎல் டி20 தொடர் எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில், பிராந்திய ரசிகர்களை கவரும் வகையில் பிராந்திய மொழிகளிலும் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப சோனி குழுமம் முடிவு செய்துள்ளது.

அதன் படி இந்த ஆண்டு தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய மொழிகளில் வர்ணனையுடுன் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு திட்டமிட்டுள்ளது.

தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, வி.பி.சந்திரசேகர், பட்டாபிராமன், வி.சத்தியநாராயணன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

2010, 2011 என இரண்டு முறை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 என இரண்டு ஆண்டுகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது நினைவுக் கூரதக்கது.