யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு கலைமகள் கிராமத்தில் மக்களால் கைவிடப்பட்ட மயானத்தில் இன்று மீண்டும் பூதவுடல் ஒன்றை தகனம் செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
புத்தூர் கிழக்கு கலைமகள் கிராம மக்கள் சுகாதார நலன்கருதி இந்த மயானத்தைக்
கைவிடுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தீர்மானித்தனர்.
இதற்கமைய, அவர்கள் வேறொரு இடத்தில் மயானத்தை அமைத்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்
எனினும், சிறுப்பிட்டியில் இயற்கை எய்திய ஒருவரின் பூதவுடலை கைவிடப்பட்ட மயானத்தில்
இன்று தகனம் செய்வதற்கு சிலர் ஏற்பாடுகளை செய்வதாக வெளியான தகவலை அடுத்து, கலைமகள்
கிராம மக்கள் அங்கு கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இயற்கை எய்தியவரின் உறவினர்கள் மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுடன் தகனக் கிரியைகளை
மேற்கொள்ள முயன்றபோது அதற்கு கிழக்கு கலைமகள் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மயானம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை முதல் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மக்களின் ஆட்சேபனை தொடர்பில் அறிந்த மல்லாகம் நீதவன் ஏ.ஜூட்சன் சம்பவ இடத்திற்கு வருகை
தந்து இரு தரப்பினருடம் கலந்துரையாடினார்.
இதன் பின்னர், கைவிடப்பட்ட மயானத்தில் பூதவுடலைத் தகனம் செய்வதற்கான அனுமதி
மறுக்கப்பட்டதை அடுத்து பயன்பாட்டிலுள்ள மயானமொன்றில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.