இந்திய குடிமகன் என்ற அந்தஸ்தைபெற்ற அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்!

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷான் டைட் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிவரும் போது மும்பையைச் சேர்ந்த மொடல் அழகி மசூம் சிங்காவுடன் பழக்கம் ஏற்பட்டது.

காலங்கள் கடந்து செல்ல இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அட்டையின் புகைப்படத்தை உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியில் விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும்,

தற்போது 35 வயது கடந்துள்ளதால் விளையாட வாய்ப்பு கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆஸி அணிக்காக 3 டெஸ்ட், 35 ஒருநாள் மற்றும் 21 T-20 போட்டிகளில் விளையாடி உள்ள டைட் 2007 ஆம் ஆண்டு டெஸ்ட்டில் இருந்தும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் அவர் தற்போது T-20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது