யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரின் ATM அட்டையைத் திருடி சாராயம் குடித்த சிங்கள காவாலிகள்!!

வைத்தியசாலை ஊழியரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.ரி.எம் அட்டை மூலமாக சாராயம் வாங்கி குடித்த மூன்று சிங்கள காவாலிகளை யாழ்ப்பாண பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் வங்கி அட்டை மூலமாகவே அவர்கள் சாராயம் வாங்கி குடித்துள்ளனர். தனது வங்கியட்டை தொலைந்ததை அறிந்த ஊழியர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது கந்தர்மடம் பகுதியிலுள்ள சாராயக் கடையில் 30 ஆயிரம் ரூபாவுக்கு சாராயம் வாங்கி குடித்தமை தெரிய வந்துள்ளது. இதனை  தொடர்ந்து பொலிசாரின் விசாரணைகளின் பின்பு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.