யாழில் 7 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவன் கைது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் தனிமையில் இருந்து 7வயது சிறுமியினை துஸ்பிரயோகம் செய்யமுற்பட்ட அதே கிராமத்தினை சேர்ந்த 20வயதுடைய இளஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 6ம் திகதி இடம் பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

 தாய் வேலைக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி பேரனின் பாதுகாப்பில் வீட்டில் இருந்துள்ளார். உறவு முறையிலான அதே பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய இளஞன் தனிமையில் சிறுமி இருப்பதனை கண்ணுற்று வீட்டுக்கு வந்துள்ளார். நீண்டநேரமாக சிறுக்கு கதை தொடுத்துள்ளதுடன், தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்கு சிறுமி சமையல் அறைப்பக்கம் சென்ற போது பின்னால் சென்ற இளஞன் சிறுமியின் கையினை பிடித்து துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளான்.

பயத்தில் சிறுமி அலறியதை அடுத்து வந்த இளஞன் பின்பக்கமாக தப்பி சென்றுள்ளதுடன், சிறுமி இது தொடர்பில் தாயாருக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். சிறுமியினை அழைத்து மானிப்பாய் பொலிஸ் நிலையம் வந்த தாய் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவித்திருந்தார். வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இளஞனை நேற்று(13) கைது செய்திருந்தனர். சிறுமியினை மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தியதுடன், இளஞனையும் சட்டவைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெறப்பட்டுள்ளது.