இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் வீடு புகுந்து கொள்ளையிட முயற்சித்த கொள்ளையருக்கு பெறுமதியான பொருள்கள் எவையுமே கிடைக்கவில்லை.
இதனால் வீட்டில் இருந்த 3 பெண்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுக் கொள்ளைக் கும்பல் தப்பித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் உள்ள ஆண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“தாதிய உத்தியோகத்தர் இரவுக் கடமைக்குச் சென்றுவிட்டார். அதிகாலை 2 மணியளவில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் கொள்ளையர்கள் உள் நுழைந்தனர். வீட்டின் சகல அறைகளிலும் நகைகள் மற்றும் பணம் உள்ளனவா என்று அவர்கள் தேடினர். சமையலறையலிருந்த பாத்திரங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சங்கிலி ஒன்றும், மோதிரம் ஒன்றும், இரு அலைபேசிகளையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.
தாதிய உத்தியோகத்தரின் மாமியார் இரத்தினம் – சாந்தினி (வயது–55) என்பவரை தட்டியெழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி நகை, பணம் எங்கிருக்கின்றன என்று கொள்ளையர்கள் கேட்டனர். அவருக்கு அருகில் படுத்துறங்கிய அவரது மகள் கார்த்திகா எழுந்து கூக்குரலிடவே அவரின் தலையில் கத்தியால் பலமாக தாக்கினர் கொள்ளையர்கள். இருப்பினும் இவர்கள் வாய் திறக்காத காரணத்தால் இருவர் மீதும் பலமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சத்தம் கேட்கும் நிலையில் மற்றொரு அறையில் இரு சிறு பிள்ளைகளுடன் ரூபா (வயது–-35) என்பவர் தூக்கத்தி லிருந்தார். அவர் விழித்து தாயாரும் சகோதரியும் உறக்கத்தில் இருந்த அறையை நோக்கிச் சென்றவேளையில் அவரின் கழுத்திலும் வாளை வைத்து கொள்ளையர்கள் அச்சுறுத்தினர். நகை, பணம் அனைத்தையும் கொடுத்துவிட்டால் உயிர் பிழைப்பீர்கள் என்று கொள்ளையர்கள் அச்சுறுத்தினர்.
எம்மிடம் எந்த நகைகளும் இல்லை அனைத்தும் வங்கியில் அடைவு வைத்தே புதிய வீட்டைக் கட்டுகின்றோம் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அவர்கள் கத்தியுள்ளனர்.
மூவர் மீதும் சுமார் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக கொள்ளையர்கள் பலமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அபயக் குரலெழுப்பவே அயலில் உள்ள வீடுகளில் மின் விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன. அதனையடுத்தே கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இருப்பினும் வீட்டில் இருந்த மூன்று பெண்கள் மீதும் வாள் வெட்டு இடம்பெற்றது” என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காணவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியில் இருந்த கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நடந்த சம்பவத்தைக் கூறியதனையடுத்து அவரே அயலில் உள்ளவர்களுக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அயலில் உள்ளவர்கள் அவர்களை மீட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த மூவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.