15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி பிணையில் வந்தவன் மீண்டும் கைது!!

15வயது சிறுமியினை காதலித்து வட்டக்கச்சி பகுதிக்கு அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெல்லிப்பளை பொலிஸாரினால் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரின் பெற்றோரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் மேற்படி இளைஞனை மீண்டும் தெல்லிப்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது பிணையினை நிராகரித்த மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன்  மீண்டும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.