உடப்புஸ்ஸல்லாவ ரப்பான பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
குறித்த விபத்தில் மஸ்பன்ன திம்புலன பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.