1000 கோடி கிளப்பில் தீபிகா: உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்தியப் பெண்

தமிழில் 100 கோடி வசூல் என சில நடிகர்களின் ரசிகர்கள் சர்வசாதாரணமாக அடித்து விடுவார்கள். படம் வெளிவந்து மூன்று நாளிலேயே 100 கோடி என அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதுன் உச்சபட்சமான காமெடியாக இருக்கும். மொத்தமாக அந்த மூன்று நாட்களில் 15 கோடி ரூபாய் வசூலித்திருந்தாலே அதிகம். அதிலும் எவ்வளவு 'ஷேர்' வரும் என்பதையெல்லாம் அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. ஒரு படம் 100 கோடி வசூலிப்பது பெரிதில்லை. அந்த 100 கோடியில் எவ்வளவு லாபம் என்பதுதான் முக்கியம் என்பதை அவர்களுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது ?.

சூர்யா நடித்து வெளிவந்துள்ள 'சி 3' படம் வியாபாரத்திலேயே 100 கோடியைக் கடந்தது என்று தகவல்கள் ஒருபுறம். இதையெல்லாம் பார்ப்பதற்கே நமக்கு ஐயகோ என்றிருக்கிறதே. தீபிகா படுகோனே ஹாலிவுட்டில் நடித்து வெளிவந்துள்ள முதல் படமான 'XXX : ரிட்டர்ன் ஆப்த சேன்டர் கேஜ்' படம் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படத்தின் வசூல் கடந்த ஞாயிறு வரையில் 1000 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள்.

ஹிந்தியில் 100 கோடி கிளப் என்பது இப்போதுதான் 300 கோடி கிளப் என மாறியுள்ளது. அதாவது படம் நடித்து, அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல்  ஆனால். அவர்கள் ஒரு கிளப்பில் அங்கத்தவர் ஆகலாம். மற்றவர்கள் அண்ணாந்து வேடிக்கை தான் பார்க்கவேண்டும். ஆனால் அங்குள்ள பாலிவுட் ஹீரோக்களையும் மிஞ்சும் அளவில் தீபிகா படுகோனே 1000 கிளப்பில் சேர்ந்து விட்டார் என்பதுதான் இப்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

இருங்கப்பா...எங்க ரஜினியோட 2.0 வரட்டும் 1500 கோடி அள்ளப் போகிறார் பாருங்கள் என ரஜினி ரசிகர்கள் இப்போதே தயாராகியிருப்பார்கள்.