ரஜினிக்கு அடுத்து இந்த தமிழ் ஹீரோவை மிகவும் பிடிக்கும்! டோனி பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார் டோனி.

தற்போது TNPL கிரிக்கெட் போட்டிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் தனக்கு பிடித்த தமிழ் ஹீரோ யார் என தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

"எனக்கு பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்த சொன்னால், முதல் மூன்று இடங்களில் ரஜினி மட்டுமே இருப்பார், நான்காவது இடத்தில் நடிகர் சூர்யா இருப்பார்" என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.