தல அஜித் தான் என் ரோல் மாடல்: கின்னஸ் சாதனை முயற்சியில் துடிப்பான இளைஞர்

எந்த பின்னனி இல்லாமல் சினிமாவுக்கு வந்த நடிகர் அஜித் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் இன்று அடைந்திருக்கும் உச்சம் அனைவரும் அறிந்ததே.

அவரை ரோல் மாடலாக ஏற்று பல இளைஞர்கள் தங்கள் துறையில் சாதிக்க துடிப்புடன் செயல்படுகிறார்கள். அதில் ஒருவர் தான் கோயம்பத்தூரை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர்.

ஒற்றை சக்கரத்தில் சைக்கிளை ஓட்டுவதில் வல்லவரான இவர், அதில் கின்னஸ் சாதனை செய்யும் முனைப்புடன் 12 ஆண்டுகளாக கடும் பயிற்சியில் ஈடு பட்டு வருகிறார்.

தல அஜித் கார், பைக் ரேசில் செய்த பல சாதனைகளை பார்த்து தான் எனக்கு இந்த சாதிக்கும் எண்ணம் வந்ததாக அருண்குமார் கூறுகிறார். ஒரு மணி நேரத்தில் 12 கிலோ மீட்டர் சைக்கிளை ஒற்றை சக்கரத்தில் ஓட்டியதே இதுவரை கின்னஸ் சாதனையாக இருக்கிறது.

20 கிலோ மீட்டர் ஓட்டி அதை முறியடிக்கும் முனைப்புடன் இருக்கிறார் அந்த துடிப்பான இளைஞர்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர், தனக்கு ஸ்பான்சர் கிடைத்தால் இன்னும் சிறப்பாக பயிற்சி எடுக்க முடியும் என கூறுகிறார். அவர் கடும் முயற்சிக்கு சீக்கிரம் பலன் கிடைக்க நாமும் வாழ்த்துவோம்.