நடிகை ராதிகா ஆப்தேவின் ஆபாச பட சிடி விற்பனை! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

நடிகை ராதிகா ஆப்தேவின் பார்ச்ட் படத்தில் வரும் நிர்வாண காட்சிகள் சிடிக்களாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் தயாரிப்பாளர் அஜய் தேவ்கன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹூசைன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பார்ச்ட். வெளிநாடுகளில் வெளியாகி பல விருதுகளையும் குவித்து வரும் இந்தப் படம், இந்தியாவில் எதிர்வரும் 28ம் திகதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹூசைன் நடித்துள்ள ஆபாச காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த படத்தின் காட்சிகள் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் வரும் நிர்வாண காட்சிகள் கொல்கத்தாவில் ரூ. 90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தயாரிப்பாளர் அஜய் தேவ்கன் பொலிசில் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.