விஜய், அட்லீ படத்தின் நாயகி இவர்தானா?

தெறி, தெறி என ரசிகர்களை கொண்டாட வைத்த விஜய், அடுத்து தன்னுடைய 61வது படத்தை அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வால் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் 61வது படம் என்று விக்கிப்பீடியாவில் இருக்கும் பக்கத்தில் காஜல் அகர்வால் நாயகி என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த தகவல் உண்மையா என்பதை படக்குழுவினர் அறிவித்தால் தான் உண்டு.