விஜய்யால் அஜித் படத்தில் நடிக்க முடியாமல் போனது- பிரபல நடிகர் சோகம்

தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் விஜய், அஜித்துடன் நடித்துவிட வேண்டும் என்று விருப்பம். ஆனால், ஒரு சிலருக்கே இந்த வாய்ப்பு அமைகின்றது.

இந்நிலையில் மிருதன் படத்தில் வில்லன் டாக்ட்டராக நடித்தவர் தான் ஜீவா ரவி, இவர் கத்தி படத்தில் கலேட்டராகவும் நடித்தவர்.

இவர் தான் முதலில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் அப்பாவாக நடிக்க இருந்தாராம், அன்றைய தினம் தான் கத்தி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு இருந்ததாம்.

அந்த ஒரு நாளுக்காக என்னை அறிந்தால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என வருத்தமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

ஆனால், அதே படத்தில் அனுஷ்காவின் தந்தையாக வருபவருக்கு இவர் தான் டப்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.