நாயகி படத்தை ப்ரோமோஷன் செய்யாதது ஏன்? த்ரிஷா வைத்த சஸ்பென்ஸ்

நடிகை த்ரிஷா நடித்துள்ள நாயகி என்ற ஹாரர் திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு சென்ற மாதமே வெளியானது. படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

படத்தை சரியாக விளம்பரப்படுத்தாததே அதற்கு காரணம் என இயக்குனர், சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது தமிழ் படமும் வெளியாகவுள்ள நிலையில் எந்த விழாவிற்கும் த்ரிஷா வரவில்லை.

அதனால் த்ரிஷாவிற்கு, படக்குழுவிற்கும் எதோ பிரச்சனை என பேசப்பட்டது. தற்போது இந்த விவகாரம் பற்றி த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான வெளியிடுவேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.