'ரெமே' படத்திற்காக ஆங்கில பாடல்

ரெமோ படத்­திற்­காக ஆங்­கி­லத்தில் பாடல் ஒன்­றுக்கு இசை­ய­மைத்­தி­ருக்­கிறார் அனிருத். சிவ­கார்த்­தி­கே­யன்-­, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாக்­யராஜ் கண்ணன் இயக்­கி­யி­ரு­ககும் 'ரெமோ' படத்தின் விளம்­ப­ரத்­திற்­காக ‘சிரிக்­காதே’ என்று தொடங்கும் மியூசிக் வீடியோ ஒன்றை படக்­கு­ழு­வினர் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

இந்த வீடி­யோவை பிரபு ராதா­கி­ருஷ்ணன் என்­பவர் இயக்­கி­யி­ருக்­கிறார். இவர், ‘ரெமோ’ படத்தின் தயா­ரிப்­பாளர் ஆர்.டி.ராஜாவின் தயா­ரிப்பில் நிவின்­பாலி நடிக்­க­வி­ருக்கும் படத்தை இயக்­க­வி­ருப்­பவர்.

மிக பிரம்­மாண்­ட­மான முறையில் தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் ‘சிரிக்­காதே’ மியூசிக் வீடியோ சோனி மியூசிக் நிறு­வனம் இன்று ஓகஸ்ட் 18 ஆம் திகதி யூடியூப் செனல் மற்றும் டுவிட்டர் பக்­கத்தில் வெளி­யி­ட­வுள்­ளது. இந்த மியூசிக் வீடி­யோ­வுக்கு இசை­ய­மைத்­தி­ருப்­பவர் அனிருத். பாடல் வரி­களை விக்னேஷ் சிவன் எழு­தி­யுள்ளார்.

அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி வெங்­கடேஷ் ஆகியோர் இணைந்து பாடி­யுள்­ளனர். ஸ்வரூப் பிலிப் என்­பவர் ஒளிப்­ப­திவு செய்­துள்ளார். இந்த வீடி­யோவில் சிவ­கார்த்­தி­கேயன், கீர்த்தி சுரேஷ், அனிருத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநி­தி­ வெங்­கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபா­ஜெர்­மியா ஆகியோர் தோன்­ற­வி­ருக்­கி­றார்கள்.

தமிழைத் தொடர்ந்து இந்த மியூசிக் வீடி­யோவை ஆங்­கி­லத்­திலும் வெளி­யி­ட­வி­ருக்­கி­றார்­களாம். தமிழில் வெளி­யான அடுத்த வாரத்தில் ஆங்­கிலப் பதிப்பை வெளி­யி­ட­வுள்­ளார்கள்.

எம்.டி.வி. நிறு­வனம் இந்த ஓடி­யோவை வெளி­யி­ட­வி­ருக்­கி­றது. ஆங்­கி­லத்தில் இந்த பாடலை ‘இன்னொ கெங்கா’ பாடியிருக்கிறார். இந்த மியூசிக் வீடியோவை ஆர்.டி.ராஜா, 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.