பிரபல நடிகைக்கு நடந்தது… சிக்கினார் வாலிபர்

நடிகை காவ்யா மாதவன் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் நடத்தி அதில் ஆபாச கருத்துக்களை ெவளியிட்டு வந்த பத்தனம்திட்டையை சேர்ந்த வாலிபரை கொச்சி போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் கடந்த மாதம் கொச்சி போலீஸ் கமிஷனர் தினேஷிடம் ஒரு புகார் அளித்தார். அதில் தனது பெயரில் போலியாக பேஸ்புக் பக்கம் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அதில் அடிக்கடி ஆபாச கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரினார். இதையடுத்து கொச்சி தனிப்பிரிவு உதவி கமிஷனர் பாபுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சைபர் செல் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பேஸ்புக் கணக்கு திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவரது நண்பரான பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தை சேர்ந்த அரவிந்த் பாபு எவ்பவர் அவரது அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை திருடி சிம்கார்டு வாங்கி அதில் பேஸ்புக் கணக்கு தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கொச்சியில் உள்ள ஒரு நிறுனத்தில் பணி புரிந்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அரவிந்த் பாபுவை கைது ெசய்தனர்.

இதற்கிடையே போலீஸ் விசாரணையில் காவ்யா மாதவன் பெயரில் மேலும் 12 போலி பேஸ்புக் கணக்குகள் நடத்தப்படுவது ெதரிய வந்துள்ளது. இவர்களை கைது செய்ய ேபாலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பல முன்னணி நடிகைகளின் பெயரிலும் ஏராளமான போலி பேஸ்புக் அக்கவுண்ட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.