“அப்பா” ஒவ்வொரு பெற்றார்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.!!!

சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து!!!
மிகவும் உணர்வுபூர்வமாகவும், ஜதார்த்தமான காட்சிகளாலும் இன்றைய தமிழ்சமுதாயத்திற்கு பல முக்கியமான தகவலை செல்லியுள்ளார் என்று நம்புகிறேன்.!!!

ஒவ்வொரு பெற்றார்களும் தங்கள் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்பூட்டலாகவும் ஆணித்தரமான முறையில் அடித்துக்கூறியுள்ளார்!!!

பொதுவாக இன்றைய தமிழ்பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கவியல், பொருளாதாரம், வரலாறு கற்றுக்கொடுக்க வேண்டுமென்று விரும்புவதில்லை.

இதானால் இக்குழந்தைகளின் எதிர்காலம் எப்படியான இருட்டாக இருக்குமென்று சொல்கிறது இக்காவியம்.!!!

மற்றவர்களின் பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு அறியாமையின் முதிர்ச்சியால் போட்டி, தற்பெருமை, பொறாமை, தாழ்வு மனப்பாங்கிலும், எது படித்தால் எவ்வளவு வருமானம் சீக்கிரம் கிடைக்குமென்று நினைத்த, நினைக்கிற, நினைக்கப்போகும் ஒவ்வொரு பெற்றார்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.!!!

அழுத்தமான கதைக்களம், எதார்த்தமான அத்தனை நடிகர்களின் நடிப்பும் மிகவும் சிறப்பு, ஒளிப்பதிவாளரின் தனித்துவமான ஆற்றலும் இவை அனைத்திற்கும் உயிராகயிருந்து உயிர் கொடுத்த மெல்லிய இசையும் கல்லைக்கூட கசியவைத்து விட்டது.!!!

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தங்கமீன் என்ற படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது!!!