ஆபாச பட நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக உருவாகிறது.
கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பொலிவூட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான ‘வடகறி’யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
பொலிவூட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர், இப்போது பொலிவூட்டில் நம்பர் வன் ஹீரோயின். இந்திய அளவில் மோடிக்குப் பிறகு கூகுள் தேடுதலில் அதிகமாக தேடப்படும் நபராக சன்னி லியோன் உள்ளார்.
தனிநபர்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக உருவாக்குவது பொலிவூட்டில் தற்போது டிரெண்டாக உள்ளது.
சச்சின் டெண்டுல்கர், அசாருதீன், டோனி உட்பட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்தில் சன்னி லியோனே நடிக்க உள்ளார்.
அமெரிக்காவில் பிரபல ஆபாச பட நடிகையாக கொடிகட்டி பறந்து, அந்த திரையுலகை விட்டு வெளியேறி, தற்போது ெபாலிவூட்டில் பிரபலமாகியது வரையிலான சன்னி லியோனின் வாழ்க்கை அப்படியே படமாக்கப்படவுள்ளது.
இந்த திரைப்படத்தை பொலிவூட் இயக்குநர் அபிஷேக் வர்மா இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'தேரே பின் லேடன்' படத்தை இயக்கி பிரபலமானவர்.
இந்த படத்தில் சன்னி லியோனின் கணவரான டேனியல் வெபர், படத்திலும் கணவராகவே நடிக்கவுள்ளார்.
சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.