ஆல்பர்ட் தியேட்டரில் படம் பார்த்த ரஜினிகாந்தின் குடும்பம்: ரசிகர்களோடு ரசிகர்களாக ஆரவாரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம், இரு வேறு கருத்துக்களுடன் வெளிவந்துள்ளது.

படம் மிக நன்றாக இருக்கிறது என ரஜினி ரசிகர்களும், ஒரு முறை கூட பார்க்க முடியாது என வேறு சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

சென்னையில், நேற்று அதிகாலை காசி தியேட்டரில் 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வெற்றி தியேட்டர், ஆல்பர்ட் உதயம், தேவி, உள்ளிட்ட சென்னை திரையரங்குகளில் இப்படத்தின் முதல் காட்சி வெளியிடப்பட்டது.

இதில், எழும்புரில் உள்ள  ஆல்பர்ட் தியேட்டரில் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ், இரண்டாவது மகள் சௌந்தர்யா ஆகியோர் ரசிகர்களோடு ரசிகர்களாக படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பை பார்த்தனர்.

ரஜினிகாந்த் திரையில் தோன்றும் முதல் காட்சியின்போது, லதா ரஜினிகாந்த், தனுஷ் சௌந்தர்யா ஆகியோர் எழுந்து நின்று கைதட்டி, ஆரவாரமாக கூக்குரலிட்டு உற்சாகமடைந்தனர். இதேபோன்று பல இடங்களிலும், விஐபிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கபாலி படத்தைப் பார்த்தனர்.